செய்தி:
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி. ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம். வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் அதிகரித்தது வர்த்தகம்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பு அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியைக் கூட்டி இந்தியத் தொழிலதிபர்களுக்கும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார்.
தற்போது மத்திய பட்ஜெட்டினால் பங்குச் சந்தை திடீர் சரிவை சந்தித்த பிறகு மறுபடியும் புகுந்து வரிவிகிதத்தை குறைத்து பங்குச் சந்தையை உயர வைத்திருக்கிறார்.
ஆக பொருளாதார ஏற்றத்தையும் இறக்கத்தையும் அமெரிக்க அதிபர் தான் மெயின் சுவிட்சை போல தீர்மானிக்கிறாரா?