செய்தி:
“அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். தேர்தல் வருகிறது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். தனி நபர்களை விட கட்சி தான் பெரிது.”
– திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடம்தான் எச்சரிக்கை விட வேண்டியது இருக்கிறது என்றாலும், சொந்தக் கட்சிக்காரர்களையே இப்படியெல்லாம் தற்போது முன் ஜாக்கிரதையாக எச்சரிக்க வேண்டியிருக்கிறது.