அந்தக் காலத்தில் இணைந்து பாடுவதென்பது சிரமம்!

1966-ஆம் ஆண்டு ஏ.சி. திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான ‘ராமு’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 

இந்தியில் வெளியான ‘தூர் ககன் கி சாவோன் மேயின்’ திரைப்படத்தின் ரீமேக் தான் ‘ராமு’. ஹிந்தியில் இப்படம் படு தோல்வி அடைந்த நிலையில் தமிழில் பெறும் வெற்றி பெற்றது. 

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்ணன் வந்தான்’ பாடல் எப்படி பாடப்பட்டது என்பது குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட டி.எம்.எஸ், “ராமு படத்தில் என் தம்பி சீர்காழி கோவிந்தராஜனும் நானும் சேர்ந்து பாடினோம்.

படத்தில் ஒரு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாகையா பாடிக்கொண்டிருப்பார். 

அவர் பாடிக் கொண்டிருக்கும் போது தன் குழந்தையை கடவுள் கண்ணன் காப்பாற்றியது குறித்து சந்தோஷப்பட்டு ஜெமினி கணேசன் பாடுவார்.

இந்தப் பாடலில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் போது நான் இடையில் பாட வேண்டும். 

இன்று இருப்பது போன்று தனி தனி மைக் எல்லாம் அப்போது கிடையாது. ஒரே மைக் தான் இருக்கும். அதில் தான் இருவரும் பாட வேண்டும். நான் பாடும் பொழுது சீர்காழி கோவிந்த ராஜன் ஒதுங்கிவிடுவார். 

அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் உணர்ச்சியுடன் பாடியிருப்பேன். அந்தப் பாடல் மிகவும் அருமையான பாடல்” என்றார்.

– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

You might also like