பிரபஞ்சனும் நானும் ரயிலில் போய்க் கொண்டிருந்தோம். கேரளாவில் திருச்சூரில் நடந்த ஒரு மலையாள இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். வழி முழுவதும் பிரபஞ்சன் பேசிக்கொண்டு வந்தார்.
அப்போது தான் எழுதப்போகும் ஒரு மாஸ்டர் பீஸ் நாவலின் கதையை, பாட்டி பேரனுக்கு கதை சொல்வது போல சுவாரசியமாக சொல்லிக் கொண்டு வந்தார்.
எழுதப் போகிற ஒரு மாஸ்டர் பீஸ் நாவலை முதன்முதலாக நேரில் கேட்டவன் என்ற கௌரவம் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அது கிடைக்கவே இல்லை. ஏனென்றால் பிரபஞ்சன் அதை எழுதவே இல்லை.
அதனால்தான் சொல்கிறேன், எழுத நினைத்ததை யாரிடமும் சொல்லாதீர்கள். எழுதி முடியுங்கள்.
நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை வைத்து நீங்கள் உங்களைப் பெருமையாக நினைத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால், மற்றவர்கள் நீங்கள் எதை செய்திருக்கிறீர்களோ அதை வைத்து உங்களைப் பெருமையாக எடை போடுகிறார்கள்.
எனவே, இதை எழுதப் போகிறேன், அதை எழுதப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்காமல், முதலில் எழுதுங்கள்.
- எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி எழுத்தாளர் இந்திரனின் நினைவலைகள்