அதிசய ராகத்தை உருவாக்கிய பாலமுரளி கிருஷ்ணா!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா.

கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தென்னிந்தியாவில் பிரபலமாகத் திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

உயரிய விருதுகளான பத்ம விபூஷண் (1991), பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே, சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கே.பாலசந்தர் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படம் எடுத்தபோது, பாடலில் இதுவரை இல்லாத ஒரு ராகம் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

அவர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, எம்.எஸ்.வி. பாலமுரளி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு விஷயசத்தைச் சொன்னார்.

அதன்பிறகு அப்படி ஒரு இனிமையான ராகத்தை பாலமுரளி கிருஷ்ணா உருவாக்கினார்.

அதாவது, சாதாரணமாக ஒரு ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும்.

இவர் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘மகதி’ ராகத்தை உருவாக்கினார். அது பாடலாகவும் பிரபலமானது.

‘அதிசய ராகம்… ஆனந்த ராகம்’ என்ற பாடல்தான் அது

‛திருவிளையாடல்’ படத்தில் வரும் ‛ஒரு நாள் போதுமா….’ பாடல் பாலமுரளி கிருஷ்ணா பாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

– மகிழினி

You might also like