ஓவியங்களுக்காக உயிர் வாழ்ந்த பிரான்ஸ் கலைஞன்!

இம்ப்ரஷனிச ஓவிய பாணியின் தந்தை என்று போற்றப்படுவர் ஆஸ்கார் கிளாடு மோனேட் (Oscar  Claude Monet – 14 November 1840 : 5 December 1926).

அவரது முதல் ஓவியம் “இம்ப்ரஷன்” என்று பெயரிடப்பட்டதாலேயே இந்த பாணிக்கு இந்த பெயர் இடப்பட்டது.

பிரான்சின் கிராமப் பகுதியின் ஒரே காட்சியை பலமுறை ஓவியமாகத் தீட்டி அந்தந்த காலத்து மனோலயத்துக்கும், வெளிச்ச வேறுபாடுகளுக்கும் ஏற்ப ஓவியங்கள் மாறுவதை கிளாட் மோனே நிரூபித்தார்.

இதற்காகவே கிவர்னீ எனும் பிரெஞ்சு கிராமப் பகுதியில் வீடும் நிலமும் வாங்கி அதனை மிக அழகிய தாமரைக் குளங்களும்,

ஜப்பானிய முறையிலான பாலமும், ஓடைகளும், பூஞ்செடிகளும், அழகிய இலைகள் கொண்ட மரங்களுமாக அமைத்து அழகு பார்த்தார்.

அவற்றை மீண்டும் மீண்டும் ஓவியங்களாகத் தீட்டி பரிசோதனைகள் பல புரிந்தார்.

தனது வாழ்க்கையில் 20 ஆண்டுகள் இந்த வீட்டிலேயே வாழ்ந்து ஓவியங்களைச் சலியாது தீட்டினார்.

நானும் என் மனைவியும் இந்த அவரது வீட்டிற்கு சென்ற அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

– கலை விமர்சகர் இந்திரன்

You might also like