ம.பொ.சி.க்குக் காரைப் பரிசளித்த கலைவாணர்!

வணக்கத்துக்குரிய ‘சிலம்புச் செல்வர்’ தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் இன்று (26.06.1906).

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி-யின் 60-வது பிறந்தநாளில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சிலம்புச் செல்வருக்கு விழா எடுத்து, கார் ஒன்றை பரிசளித்தார்.

அப்போது கலைவாணர் பேசும்போது “பரிசுப்பொருளை ம.பொ.சி அவர்கள் கையில் கொடுப்பதுதான் முறை என்பதால், நான் கொடுக்கும் காரை தூக்கிப் பார்த்தேன் என்னால் முடியவில்லை அதனால், அந்தக் காரின் சாவியை அவர் கையில் கொடுக்கிறேன்” என்று சொல்லி அரங்கத்தையே சிரிக்க வைத்தாராம்.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

#சிலம்புச்_செல்வர் #கலைவாணர் #என்எஸ்கே #என்எஸ்_கிருஷ்ணன் #தமிழஞறிர் #நகைச்சுவை #தமிழ் #சமூகச்_சிந்தனை #Tamil_scholar #ma_po_si_birthday #NSK #N_S_Krishnan

You might also like