சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
உலகளவில் 65 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் இருமடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021-ல் 761 மில்லியனிலிருந்து 2050 இல் 1.6 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியவர்கள் பல வழிகளில் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறார்கள். அவர்கள் தொழிலாளர்கள், பராமரிப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் என பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் அவர்கள் இளைய தலைமுறையினருடன் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இருப்பினும், வயதானவர்கள் வயது பாகுபாடு மற்றும் வறுமை உட்பட பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வீடு போன்ற அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது.
சர்வதேச முதியோர் தினம் என்பது முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பாகும்.
இது முதியவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும் ஒரு நாள் ஆகும்.
முதியோர் தின வரலாறு
முதன் முதலாக ஐக்கிய நாடுகள் சபையால் 1990-ம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாளை முதியோர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக 1982-ம் ஆண்டு முதன் முதலாக வியன்னாவில் முதியவர்களுக்கான உலக சபை நடைபெற்றது.
அதன் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச முதியோர் தினத்திற்கான முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
மக்கள்தொகை முதுமையானவர்களின் எண்ணிக்கை என்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களை மறுவடிவமைக்கும்
ஒரு முக்கிய உலகளாவிய போக்காகும். பொதுவாக பல நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம் 75 வயதாக உள்ளது.
இது கடந்த 1950-ம் ஆண்டை விட 25 ஆண்டுகள் அதிகம். 2030-ம் ஆண்டளவில், முதியவர்கள் உலக அளவில் இளைஞர்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது, வளரும் நாடுகளில் இந்த அதிகரிப்பு மிக வேகமாக உள்ளது.
மக்கள்தொகையின் அளவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, விரிவான சுகாதாரம். பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவு சேவைகளுக்கான தேவை கணிசமாக வளர்ந்துள்ளதற்கு காரணம் ஆகும்.
குறிப்பாக டிமென்ஷியா போன்ற நிலைமைகளைக் கொண்ட வயதானவர்களுக்கு சற்று கடினமான சிக்கல்களை உருவாகியுள்ளது.
இந்த 2024-ம் ஆண்டிற்கான முதன்மை கருப்பொருளாக கண்ணியத்துடன் முதுமை’ என்பது கூறப்பட்டுள்ளது.
உலகளவில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் இந்த தினத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து மூலைகளில் உள்ள ஒவ்வொரு முதியவர்களும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள்.
அவர்களின் அனுபவ அறிவைப் பெற்று இளையவர்கள் அவர்கள் வழியில் நடக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
2025-ஆம் ஆண்டின் கருத்து:
“முதியோர் உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளைத் தூண்டுதல்: நமது ஏக்கங்கள், நமது நல்வாழ்வு மற்றும் “(Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being and Our Rights).
இது முதியோர்களை சமூகத்தில் “மாற்றத்தின் ஏஜண்டுகள் என்று அங்கீகரித்து அவர்களின் அனுபவங்கள் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்களை (எ.கா, சுகாதார சமத்துவம், நிதி நலன், சமூக பலமது) தீர்க்க உதவுவதை வலியுறுத்துகிறது.
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்