எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தை நம்பி வாழும் ஒரு எழுத்தாளன் அகந்தையாய் தந்த கோபுரத்தில் ஏறி நின்றுகொள்ள முடியாது. அவன் எளிமையாக எல்லா மனிதர்களுடனும் சமமாக உரையாடல் நிகழ்த்தக் கூடியவனாக இருந்தாக வேண்டும்.

ஏனெனில் ஒரு எழுத்தாளனுக்குத் தெரியாதது என்று அவனைச் சுற்றி எவ்வளவு இருக்கிறது என்பதை உணர்ந்த உடனேயே அவன் எளியவனாக, எல்லோருடனும் உரையாடுபவனாக மாறிவிடுவான்.

எழுத்தாளனைச் சுற்றி இருக்கும் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை வேறு எவரையும் காட்டிலும் எழுத்தாளனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்றால் தீர்க்கப்பட்ட அந்த பிரச்சினை புதிய பல பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதை எழுத்தாளன் புரிந்திருக்க வேண்டும்.

நான் முழுக்க முழுக்க நம்புவது இதுதான் : மாக்சிம் கார்க்கியின் வார்த்தைகள்…

“எழுதுகிறவன் தான் எழுதுகிறவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும். “

  • எழுத்தாளர் இந்திரன்

 

 

 

You might also like