பெருங்கனவை நோக்கிய சாதனைப் பயணம்!

துணை முதலமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி

சமீபத்தில் ஒரு வாரப் பயணமாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து நாடு திரும்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பன்னாட்டு முதலீடுகளை தமிழ்நாடு நோக்கி ஈர்ப்பதுவே பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ் மண்ணின் சுயமரியாதைச் சரித்திரத்தை உலகுக்கு உணர்த்தவும் மாபெரும் தமிழ்க் கனவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தாய்த் தமிழ்நாடு திரும்பிய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில் இன்று காலை வரவேற்று மகிழ்ந்தோம்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்திறப்பு, சுயமரியாதை இயக்கம் பற்றிய கருத்தரங்கத்தில் சிறப்புரை, திராவிட இயக்கம் குறித்த இரண்டு முக்கியமான ஆங்கில நூல்கள் வெளியீடு என கொள்கைப் பயணமாக,

தமிழ்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் அதிமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.15 ஆயிரத்து 516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்த வெற்றிப் பயணமாக மாண்புமிகு முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லார்க்கும் எல்லாம் எனும் பெருங்கனவை நோக்கிய இச்சாதனைப் பயணம் தொடரும் என்றும் உதயநிதி வாழ்த்தியுள்ளார்.

You might also like