செய்தி:
சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களா:
– ஆமதாபாத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயில் எழுதி வைத்த என்ஜினீயர்!
கோவிந்த் கமெண்ட்:
சமைத்த உணவு நன்றாக இருக்கிறதென்றால், வழக்கமாக சம்மந்தப்பட்டவர்கள் பாராட்டுத் தெரிவிப்பார்கள் அல்லது குறைந்தபட்ச டிப்ஸ் கொடுப்பார்கள்.
ஆமதாபாத்தில் ஒருவர் தனக்கு சமையல் செய்து கொடுத்தவரின் பேத்திக்கே பங்களாவை கொடுத்து உயில் எழுதி வைத்திருக்கிறார் என்றால், சமையல் எத்தகைய நல்ல விளைவுகளெல்லாம் உருவாக்கி இருக்கிறது பாருங்கள்.