உலகைப் பற்றிய தவறான புரிதல்!

ரவீந்திரநாத் தாகூரின் வெற்றி மொழிகள்:

  • ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலகம் வலி நிறைந்தது என்பது அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.
  • விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை. 
  • வெறுமனே நின்று தண்ணீரைப் பார்த்துக்கொண்டு இருப்பதன் மூலமாக உங்களால் கடலைக் கடக்க முடியாது. 
  • உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், பிறகு உங்களது சொந்த வழியில் தனியாக செல்லுங்கள். 
  • குழந்தைகளிடையே நல்ல இயல்பு அமைந்திருக்கின்றது. பயனுள்ள பொருளையும் மதிப்புள்ள மக்களையும் தம்முடன் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியடையும் திறனே அது. 
  • அன்பு ஒரு முடிவில்லா மர்மம், ஏனென்றால் அதை விளக்குவதற்கு வேறு எதுவுமில்லை. 
  • அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு அல்ல, அது உண்மை. 
  • நட்பின் ஆழம் அறிமுகத்தின் நீளத்தைச் சார்ந்தது அல்ல. 
  • நாம் இந்த உலகத்தைத் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். 
  • தான் நடும் மரங்களின் நிழலில் தான் ஒருபோதும் உட்கார மாட்டார் என்று தெரிந்தும் மரங்களை நடுபவர், குறைந்தபட்சம் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். 
  • பூவின் இதழ்களை பறிப்பதன் மூலமாக, உங்களால் அதன் அழகை சேகரிக்க முடியாது. 
  • ஒரு இலையின் முனையில் உள்ள பனியைப்போல, நேரத்தின் விளிம்புகளில் உங்கள் வாழ்க்கை எளிமையாக நடனம் புரியட்டும். 
  • பட்டாம்பூச்சி மாதங்களை கணக்கிடுவதில்லை தருணங்களை கணக்கிடுகிறது, அதுவே அதற்கு போதுமான நேரமாக உள்ளது. 
  • கடவுளின் பாதத்தில் பூக்களை வைக்க கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் உங்கள் சொந்த வீட்டை அன்பின் வாசனையால் நிரப்புங்கள், தலை குனிந்து பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் செல்லாதீர்கள், முதலில் சக மனிதர்கள் முன் அன்பாக தலை வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள். 
  • கலையில், மனிதன் தன்னை வெளிப்படுத்துகிறான் பொருட்களை அல்ல. 
  • மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.

    தொகுப்பு – யாழினிராஜ்
You might also like