தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுக்க, தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பல வெற்றிப் படங்கள் நடித்து வந்தார்.
தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்தப் படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று கொடுத்தது.
இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சினிமாவில் நுழைந்த கதை :
2003-ம் ஆண்டு வெளியான ‘துஜே மேரி கசம்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இப்படத்தில் நடிக்கவே முடியாது என அடம் பிடித்தவரை இயக்குநர் விடாப்பிடியான ஃபாலோ செய்து நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். அதிலும் அப்படத்தின் தெலுங்கு வர்ஷன் படத்தைப் பார்த்த பிறகு தான் ஓகே சொன்னாராம்.
மூன்று மொழிகளில் அறிமுகம் :
முதன் முதலில் ஜெனிலியா அமிதாப் பச்சனுடன் பார்க்கர் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதைப் பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் இவரை ‘பாய்ஸ்’ படத்திற்காக செலக்ட் செய்துள்ளார்.
அதே நேரத்தில் தான் தெலுங்கில் ‘சத்யம்’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் அறிமுகமானார் ஜெனிலியா.
மாடலிங் மீது காதல் :
ஜெனிலியாவுக்கு படத்தில் நடிக்கத் தான் பிடிக்காதாம். மற்றபடி காலேஜ் படிக்கும் போதிலிருந்தே மாடலிங் மீது தீவிர ஆசை கொண்டு இருந்தாராம்.
தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார் ஜெனிலியா.
சூப்பர் ஹிட் மூவிஸ் :
அதை தொடர்ந்து ஜெனிலியா காட்டில் எக்கச்சக்கமான படங்கள் மழையென பொழிய தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையானார்.
2006-ம் ஆண்டு ‘பொம்மரிலு’ என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் நடிகர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்தார். அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமைந்தது.
அப்படம் தான் பின்னர் 2008-ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’.
இந்தப் படம் வெளியானது முதல் இளைஞர்கள் அனைவரும் ஜெனிலியா மாதிரி பொண்ணு தான் எனக்கு வேணும் என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரின் கியூட் கனவு கன்னியானார் ஜெனிலியா.
மிகவும் சக்சஸ்ஃபுல் நடிகையாக இருந்த ஜெனிலியா திடீரென காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பதற்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டார்.
நடிப்புக்கு பிரேக் :
ஜெனிலியா தமிழில் நடித்த கடைசி படம் ‘வேலாயுதம்’. அதற்கு பிறகு அவர் நடிப்பதில் இருந்து மட்டுமே விலகினாலும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து மராத்தியில் ‘வேத்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது.
லிம்கா சாதனை :
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளிலும் பேக் டு பேக் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து லிம்கா உலக சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கில் – ரெடி, தமிழில் – சந்தோஷ் சுப்பிரமணியம், கன்னடத்தில் – சத்யா இன் லவ் மற்றும் ஹிந்தியில் – ஜானே து… யா ஜானே நா என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் கலக்கியுள்ளார் ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
எப்பொழுதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜெனிலியா அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்னை ரசிக்கும் படி செய்து வருவார்.

அந்த வகையில் தற்பொழுதும் இளமையாக குழந்தைத்தனம் மாறாமல் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியீட்டு ரசிகர்களை ரசிக்கும் படி செய்துள்ளார்.
அந்த லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கத் தயார் என்கிறார் நடிகை ஜெனிலியா.
அண்மையில் இவர் அமீர் கானுடன் இணைந்து நடித்த ‘சிதாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, தெலுங்கு, கன்னடத்தில் உருவாகியுள்ள ‘ஜூனியர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், பெரிய கதாபாத்திரங்களிலும்கூட நடிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ஜெனிலியா.
மீண்டும் இந்த கியூட்டியை ரசிக்க தமிழ் ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.
- நன்றி: ஏபிபி நாடு