நடிகர் நாகேஷ் பற்றி இயக்குனர் கே.பாலச்சந்தர்:
“நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும்.
கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், “இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு” என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம்.
அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.
டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை!
ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.”