கதைகளில் அறிவியலைக் கலந்து எழுதக் காரணம்?

எழுத்தாளர் ராஜேஷ்குமார்

நீங்கள் உங்களுடைய கதைகளில் விஞ்ஞானத்தைக் கலந்து எழுதுவதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்வியை வாசகர் திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த செந்தில்வேல் என்னிடம் கேட்டார்.

அதற்கான பதில் இது.

இந்து மகா சமுத்திரத்தை ஒரு பிரபஞ்சம் என்று வைத்துக் கொண்டால், அந்த சமுத்திரத்தில் ஒரு குண்டூசியின் தலைப்பகுதியைத் தொட்டு எடுத்தால் எவ்வளவு நீர் கிடைக்குமோ அது சூரியன்.

குண்டூசியின் கூர்மையான பகுதியைத் தொட்டு எடுத்தால் எவ்வளவு நீர் கிடைக்குமோ அதுதான் பூமி.

அப்படி என்றால், சூரியன் பூமி என்பது இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு அற்பமானது என்பது உங்களுக்குப் புரியும்.

நான் மாணவனாக இருந்தபோது என்னுடைய விஞ்ஞான ஆசிரியர் நரசிம்மன் அவர்கள் சொன்ன இதுபோன்ற சில விஞ்ஞான விளக்கங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அதேபோல் வாசகர்களும் ஆச்சரியப்பட வேண்டும் என்று எண்ணியதின் விளைவுதான் இன்றைக்கு நான் அதிக அளவில் விஞ்ஞானத்தைக் கதைகளில் கலந்து எழுதக் காரணம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like