அன்று கண்ட அதே முகம்!

அருமை நிழல்:

இயக்குநர் ஸ்ரீதரின்  ‘கல்யாண பரிசு’  (1959) படத்தில் இணைந்தவர்கள் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும். இந்தப் படம் வெளிவந்தபோது பெரும் கீற்று.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு (1989) அதே ஜெமினி கணேசனுடன் சரோஜா தேவி இணைந்து நடித்த படம் ‘பொன்மனச் செல்வன்’. 

பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில்  வெளிவந்த இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட  ‘குடும்ப’ போட்டோவில் ஜெமினி கணேசன், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் கொஞ்சம் இளமையான அம்மாவாக அமர்ந்திருக்கிறார் சரோஜா தேவி. 

vels
You might also like