‘படிக்காத மேதை’ கற்றுத் தந்த பாடம்!

அருமை நிழல்:

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வங்க மொழியில் இருந்து பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி உருவான படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அதில், சிவாஜியின் ‘ப’ வரிசை படமான ‘படிக்காத மேதை’யும் ஒன்று.

சவுகார் ஜானகி, பி.கண்ணாம்பா, டி.எஸ்.துரைராஜ், முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.கே.பாலச்சந்திரன், அசோகன், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஈ.வி.சரோஜா, சகுந்தலா, சுந்தரிபாய் என பலர் நடித்தனர். சிவாஜியும் ரங்காராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன், மருதகாசி பாடல்களை எழுதினர். ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘படித்ததினால் அறிவு பெற்றோர்’, ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’, ‘பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு’, ‘உள்ளதை சொல்வேன் சொன்னதைச் செய்வேன்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

டிரெண்ட்செட்டராக அமைந்த இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியது. தெலுங்கில், இப்படம் ‘ஆத்மபந்துவு’ (1962) என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் நடித்த ரங்காராவும் கண்ணாம்பாவும் தெலுங்கிலும் நடித்தனர். இந்தியில் ‘மெஹர்பான்’ (1967) என்ற பெயரில் ரீமேக் ஆனது.

தமிழில் இயக்கிய பீம்சிங் இந்தியிலும் இயக்கினார். அசோக்குமார், சுனில்தத் நடித்த இதை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

‘படிக்காத மேதை’ சிவாஜியின் நடிப்புக்காகவும் சிறந்த பாடல்களுக்காகவும் இன்றளவும் பேசப்படுகிறது.

குறிப்பு: 1960-ம் ஆண்டு வெளியான ‘படிக்காத மேதை’ திரையரங்கு முன் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களும் அடுத்தக் காட்சிக்குக் காத்திருப்பவர்களும் மாநாட்டிற்கு குவிந்தது போன்ற ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் காட்சி.

You might also like