தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த எம்.பி.யின் மரணம்!

திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவான பிறகிருந்தே வைகோவுடன் பயணித்த பிரமுகர்களுள் முக்கியமானவர் கணேச மூர்த்தி.

கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். திராவிட இயக்க உணர்வுடன் தன்னை துவக்கம் முதலே பிணைத்துக் கொண்ட கணேச மூர்த்தி கடந்தத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர்.

அப்படிப்பட்ட மூத்தத் தலைவரான கணேச மூர்த்தி உயிரிழந்த விதம் பலரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தன் உயிரை தானே போக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிற கணேச மூர்த்தி நினைத்தபடியே தன் உயிரையும் இழந்திருக்கிறார்.

கட்சியின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான இவர், இப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்தார். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, அவர் விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஈரோடு மருத்துவமனையில் அவரை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்க்கவந்த வைகோ சொன்னபடி, ஒருவேளை மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் கிடைத்திருந்தால், கணேச மூர்த்தி இந்த விதமான உயிரிழக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டார்.

அப்படி என்றால், தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதது தான் உயிரிழப்பிற்குக் காரணமா?

வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு திருச்சியில் போட்டியிட கிடைத்த வாய்ப்பு அனைத்து நிர்வாகிகளையும் ஏதோபித்த முடிவு என்று சொல்லப்பட்டது எந்த அளவுக்கு சரியானது என்கின்ற கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றது கணேச மூர்த்தி எம்பியின் மரணம்.

நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ பலரும் பல்வேறு விதங்களில் வாய்ப்புக் கேட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் கணிசமானோர் வாய்ப்புக் கிடைக்காமல் விரக்தியின் விளிம்பிற்குப் போவது நடக்கமாக நடக்கக்கூடியதுதான் என்றாலும், தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூத்த அரசியல்வாதி ஒருவர் தன் உயிரையே அந்த விரக்திக்கு விலையாகக் கொடுத்திருப்பது ஏன்? என்பது தமிழகத் தேர்தல் அரசியலில் இன்னும் சிறிது காலத்திற்கு உயிர்த்துடிப்புள்ள கேள்வியாகவே இருக்கும்.

#திமுக #மதிமுக #வைகோ #கணேச_மூர்த்தி #நாடாளுமன்றத்_தேர்தல் #Erode_MP_Ganesamoorthy #dmk #mdmk #vaico #parliament_election #நாடாளுமன்ற_உறுப்பினர்_கணேசமூர்த்தி

You might also like