மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலிலும் அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

விசிக பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமாரும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

2019 தேர்தலில் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் தொல்.திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். ஆனால், இந்தத் தேர்தலில் இருவரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

You might also like