காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!

ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசுபாட்டினால் முன்கூட்டியே இறக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் எனவும் தெற்காசியாவில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, சிட்டகாங், டாக்கா, ஹைதராபாத், கராச்சி, கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் சூரத் மற்றும் பாங்காக், ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, நோம் பென், யாங்கூன் ஆகிய நகரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்கள் நைட்ரஜன் டை ஆக்சைடில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றன எனவும் இது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு வங்கதேச நகரம் சிட்டகாங்கில் மூன்று மடங்காகவும், வங்கதேசத் தலைநகர் டாக்கா மற்றும் வியட்நாமின் ஹனோய் பகுதியில் கடந்த  14 வருட காலப்பகுதியில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த காற்று மாசுபாடினால் கடந்த 2018-ல் தெற்காசியாவில் 2,75,000 பேரும், தென் கிழக்கு ஆசியாவில் 80,000 பேரும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like