படித்ததில் ரசித்தது :
ஒரு நாவல் எழுத அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு நாள்பட நாள்பட வீரியம் அதிகமாகுமே தவிர, குறையவே குறையாது. நான் 600 பக்கங்கள் எழுதுகிறேன் என்றால் அதை மீண்டும் மீண்டும் வாசித்து 300 பக்கமாக மாற்றிவிடுவேன். அப்படியெல்லாம் கொண்டுவருவதால் என்னுடைய நாவலின் தரம் அப்படியிருக்கிறது.
இசை இசைக்கப்படும்போது முழுமையாவதில்லை. அது ரசிக்கப்படும்போதுதான் முழுமையாகிறது’ என்பார் தாகூர். அதுபோல ஒரு நூல் எழுதப்படுவதைவிட, விற்பனையாவதைவிட அது வாசிக்கப்படும்போதுதான் முழுமையாகிறது. எனவே படைப்பு விற்பனையாவதைவிட, வாசிக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம். வாசகர்கள் வாங்கிய நூல்களை வாசித்துவிட்டு நல்லா இல்லை என்றாவது சொல்லுங்கள். அப்படிச் சொன்னால்தானே ஒரு படைப்பாளன் அடுத்த படைப்பை நன்றாக எழுதுவான்.
– சோ.தர்மன்