பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

அதோடு அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

You might also like