ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது.

கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு.

இந்த ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு எந்தவொரு நிபந்தனையும் இல்லை.

தமிழில் கதை எழுதத் தெரிந்த யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம் படைப்பாளர்கள் தங்கள் சிறுகதையை மின்னஞ்சல் மூலம் சேர்ப்பித்தால் போதும்.

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு – ₹ 10,000

இரண்டாம் பரிசு – ₹ 5000

மூன்றாம் பரிசு – ₹ 3,000

ஆறுதல் பரிசுகள் – ₹ 5000 ( ₹ 1000 வீதம் ஐவருக்கு)

சிறப்புப் பரிசுகள் – ₹ 5000 (₹ 500 வீதம் பத்துப் பேருக்கு)

மொத்தப் பரிசுத்தொகை ரூ.40,000 (சான்றிதழ் + பரிசுக்கேடயங்கள் உட்பட)

போட்டியின் விதிமுறைகள் :

1.  சிறுகதை இந்தப் போட்டிக்காகப் புதிதாக எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். இணையத்திலோ அல்லது வேறு அச்சு வடிவத்திலோ இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது.

ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் மட்டுமே கதைகள் அனுப்பப்பட வேண்டும். எழுதி ஸ்கேன் செய்து அனுப்பப்படும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது.

2. சிறுகதைகள் 1200 வார்த்தைகள் முதல் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் நலம்.  கதையின் கரு எது பற்றியதாகவும் இருக்கலாம்.  நவரசங்களில் எந்த ரசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு கதை எழுதலாம்.

அவை நேர்ச் சிந்தனையுடன் அமைந்தால், இந்தச் சிறுகதைப் போட்டி வைக்கப்படுவதற்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாய் அமையும்.

3. ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம்.  இரண்டாவது சிறுகதை அனுப்பினால் முதல் சிறுகதை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும்.  நீங்கள் எழுதிய சிறுகதைகளில் எது சிறந்தது என்று நீங்களே நடுவராய் இருந்து அதைத் தேர்வு செய்து அனுப்புங்கள்.

4. ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவினர் அவர்தம் குடும்பத்தினர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதியில்லை.

5. போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை சிறுகதையை முகநூல் உள்ளிட்ட வேறு ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது. பரிசு பெறும் சிறுகதைகளை தனிப்புத்தகமாக வெளியிடும் உரிமை ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு உண்டு.

6. இப்போட்டி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கவும்,  போட்டி விதிமுறைகளை சூழலுக்கேற்ப மாற்றவும் ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கு உரிமை உண்டு.

7. போட்டிக்கான சிறுகதைகளை rtsstorycontest2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறுகதை, போட்டியில் ஏற்கப்பட்டதற்கான ஒப்புதல் மின்னஞ்சல் வழியே அனுப்பி வைக்கப்படும்.

மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல்: rtsstorycontest2022@gmail.com

8. சிறுகதைப் போட்டி நவம்பர் 15 நள்ளிரவு 00 : 00 மணியுடன் முடிவடைகிறது. அதற்கு மேல் அனுப்பும் சிறுகதைகள் போட்டியில் ஏற்கப்படாது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

You might also like