காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்தாகும்!

–  ராகுல்காந்தி உறுதி

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாவது நாளில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தின்போது, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் தந்தை சண்முகம், அவரது சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்தனர். அவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார்.

அவர்கள் தமிழில் கூறியதை ஜோதிமணி எம்.பி, ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில் விவரித்தார்.

அப்போது அவர்களை விலக்க முயன்ற தனது பாதுகாவலர்களையும் ஓரம்கட்டிவிட்டு அவர்களிடம் நடந்துகொண்டே பொறுமையாக விபரங்களை கேட்டறிந்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியிடம் முன் வைத்தனர்.

மேலும் தாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் ராகுல்காந்தியிடம் அளித்தனர்.

அந்த மனுவை ராகுல்காந்தி முழுமையாக வாசித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம், ”எந்த மாநிலத்திலும் நீட் உட்பட எதையும் திணிக்க மாட்டோம். அது காங்கிரஸ் கட்சியின் பாலிசி அல்ல” என்று தெரிவித்தார்.

You might also like