நவீனமாக மாறும் பாஸ்போர்ட்!

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகமாகிறது. இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கிய நாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இதனால், அவர்கள் செல்ல விரும்பும் குறிப்பிட்ட வெளிநாடுகளில் விசா பெறுவதும் சுலபமாகிவிடும். இதற்காக அவர்கள் அந்நாட்டின் தூதரகங்களுக்கு நேரில் சென்று பல மணி நேரம் காத்திருக்கவும் தேவையில்லை.

இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது,

‘‘2022-2023-ல் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட எதிர்காலத் தொழில்நுட்பத்துடன் இ-பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இதனால், வெளிநாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் பயணங்கள் வசதியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி, நிரந்தர, தற்காலிக விலாசங்கள் மற்றும் பெற்றோர் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆதார் எண்கள் கூட இடம்பெறுவது இல்லை.

இதனால், ஒரே நபர் முதல் பாஸ்போர்ட்டை மறைத்து இரண்டாவதாக வேறு பெயரில் ஒன்றை பெறுவது நிகழ்கிறது. ஒருவரது விவரங்களை திருடி மற்றொருவர் போலியாக பாஸ்போர்ட் பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவாகின்றன.

இந்த பிரச்சினைகள் புதிய இ-பாஸ்போர்ட்டில் எழாமல் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் நாசிக்கிலுள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் தயாராக உள்ளது.


02.02.2022 12 : 30 P.M

You might also like