ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…

                                               (பூஞ்சிட்டு…) 

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை…

                                               (பூஞ்சிட்டு…) 

மாணிக்க தேர் போல மையிட்டு பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன்மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு…

                                               (பூஞ்சிட்டு…) 

1968-ம் ஆண்டு ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் வெளிவந்த ‘துலாபாரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

02.02.2021 03 : 30 P.M

You might also like