டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!

புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர்.

என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும் இம்மாதிரி செயல்களில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மிககுறைவு.

இந்தநிலையில் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி தன் முகநூலில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “அமைச்சரையும், அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்” என்று கூறியுள்ளார்.

13.01.2021 12 : 40 P.M

vels
You might also like