எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலில், “ஒழுக்கம்தான் மேன்மை தருமன்றி உயிரன்று; அதனால் உயிரினும் மேலாக ஒழுக்கத்தையே பாதுகாக்கவேண்டும்” என்று தந்திருக்கிறார். ஆனால், உயிரினும் மேலான ஒழுக்கப் பாதையில் இருந்து இன்றைய இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் […]

கண்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியக் கருவி!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களையும், அதன் பார்வையையும் தெளிவாக வைத்திருக்க உதவுவதில் கண் கண்ணாடிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

பூமியின் எதிர்காலத்திற்கான அறைகூவல்!

ஜூன் 5 : உலக சுற்றுச்சூழல் தினம்

மனித குலமும் பிற உயிர்களும் வாழ்வதற்கு இயற்கை அன்னை வழங்கிய ஆகப்பெரும் கொடைதான் இந்த பூமி.

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும். எப்படி இருந்தாலும் சிறிய வயதில் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் : பள்ளிக்கு படிக்க மட்டும்தான் போகிறோம் என்ற மனநிலையை திணிக்காதீர்கள். அங்கு போனால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். இடைவேளைகளில் விளையாட மைதானம் […]

திரை ஒளியில் தொலைந்த மனிதன்!

காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது. மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன. அந்த மாயை உலகம்தான் ‘டிஜிட்டல் உலகம்’. ஒரு காலத்தில், காலை வேளை காபி வாசனையுடனும், குடும்ப உரையாடல்களுடனும் தொடங்கியது. இன்று, அது ஸ்கிரீன் ஒளியுடனும், அமைதியான ஸ்குரோலிங்குடனும் ஆரம்பமாகிறது. அருகில் இருப்பவர்களைவிட அதாவது குடும்பத்தினரை […]

மாடலிங் டூ ராணுவ அதிகாரி: மெத்வானியின் பயணம்!

இளம்பெண் ஒருவர், மாடலிங் உலகில் கிடைக்கும் உடனடி புகழ், பணத்தைத் துறந்து, நாட்டுக்குச் சேவை செய்ய ராணுவ அதிகாரி ஆகியுள்ளார். கஷிஷ் மெத்வானி என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் இப்பெண்ணின் தந்தை விஞ்ஞானி, தாய் ராணுவப் பள்ளி ஆசிரியை. வீட்டில் தொலைக்காட்சியில் அழகிப் போட்டிகளைப் பார்த்துப் பார்த்தே, தானும் மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டுள்ளார் கஷிஷ். அதேநேரம், நாட்டுக்குச் சேவை […]