ஆரோக்கியம் அறிவோம்!
இயற்கை ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு மரபணு மூலக்கூறுகளுடன் தான் படைத்திருக்கிறது. நோய்களை எதிர்கொள்ளும் விதம், அதன் தடுப்பு முறைகள், மருத்துவம், உடற்கூறுகள் என அனைத்தும் வித்தியாசப்படுகிறது. உதாரணமாக ஒரே மாதிரியான உடல் உபாதைகள் தரக்கூடிய வலியின் வெளிப்பாடுகள் வெவ்வேறு வகையாக இருக்கும். பரவலாக காணப்படும் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவற்றிற்கான உணவு முறைகள் பற்றியும் பார்ப்போம். ரத்த சோகை: தற்போது பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இது அறியப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். […]
வீடுதோறும் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!
ஆரோக்கியம் குறித்த தேடல் பெருகிவரும் இவ்வேளையில் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்வது அவசியமாகிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், சீதோஷ்ண நிலை, வாழ்க்கை முறை, வேலை சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல், நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் வந்தபின் அவற்றை சரி செய்யவும் சில எளிய மூலிகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆரோக்கியத்துக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய மருத்துவ குணம் மிக்க இந்த செடிகளை […]
ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முதலிடம் தரும் அடிசில்!
நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் ‘அடிசில்’ உணவகம் அளிக்கிறது.
சிசேரியன் – பெண் உடல் மீதான மருத்துவ வன்முறை!
அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது. மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா? சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை சிகிச்சை அணுகுமுறை குறித்த ஒரு அலசல்; ஒரு குழந்தை தாயின் கருவறையில்இருந்து வெளி வருவதற்கான பிறப்புரிமை என்பது இயற்கையானது. சட்டப்படி பெறும் அடிப்படை உரிமையுமாகும். கருவறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழும் உரிமையை அது குறிக்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு மனிதருமே இயற்கையான […]
மலேரியா அற்ற ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவோம்!
மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந் தேதி, ‘உலக மலேரியா தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
கல்லீரல் காப்போம்; நலமுடன் வாழ்வோம்!
முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.





