படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!
அருமை நிழல் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது – படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும் பாகுபாடில்லாமல் வழங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் வழக்கமான செயல்பாடாக இருந்திருக்கிறது. அம்மாதிரியான படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நிற்பவர் ஜெயலலிதா.
திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!
‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ – என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ‘தமிழ்த் தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். ஒற்றுமையைக் குலைக்காத, அமைதியே உருவான கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார் […]
நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!
அருமை நிழல் : பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட. பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோரின் பாடல்களை மேடையில் பாடிப் புகழ்பெற்றார். பாபநாசம் சிவனின் இசைத் தொகுப்புகளை இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட நித்யஸ்ரீ, ‘பாபநாசம் சிவன் – எ லெஜென்ட்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையும் கொடுத்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை […]
அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!
“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்! – கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து…
யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!
”உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர். ”உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!” என்றேன். “வாழை, தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால் யானை முறித்துப் போட்டு விடும்! அந்த யானை போன்றதே அமெரிக்கா!” என்றனர். அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை. வாழை மரம், தென்னை மரங்களை யானை வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக! ஆனால், அங்குசத்தை யானை விழுங்க முடியுமா? […]
சிவாஜியின் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப் பற்றி மனம்திறந்து பேசியிருந்தார் விஜயகுமாரி. “நடிகர் திலகம் சிவாஜி அவர்களை அவரது மனைவியான கமலாம்மாள் கவனித்துக் கொள்கிற விதமே அவ்வளவு பாசத்துடன் இருக்கும். மாலை வேளைகளில் சிவாஜி வீட்டிலிருந்தால், அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து அவரை கவனித்து பணிவிடைகள் செய்து பேசிக்கொண்டிருப்பார். இரவு நேரத்தில் வெள்ளை […]





