‘இசையின் அரசி’ என்றும், ‘பாட்டுக்கொரு சுப்புலட்சுமி’ என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில் வல்லவர். தாயாரின் வழிகாட்டுதலில் சிறுவயதிலேயே இசைப் பயிற்சியைத் தொடங்கிய சுப்புலட்சுமி, மிகக் குறுகிய காலத்திலேயே கர்நாடக இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
தனது 13-வது வயதிலேயே சென்னை சங்கீத வித்வத் சபையில் பாடி, அப்போதைய இசை மேதைகளின் பாராட்டுகளைப் பெற்றார்.
கர்நாடக இசையை உலக அரங்கில் உயர்த்திய எம்.எஸ். சுப்புலட்சுமி, தெய்வீகக் குரல், பக்தி நிரம்பிய பாடல்கள், மீரா திரைப்பட வெற்றி, ஐ.நா. மேடையில் கச்சேரி, ராமன் மகசேசே, பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகள் மூலம் இந்திய இசையின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைஞராக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.
குறிப்பு: தாயும் மகளுமாக எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் அவரது தாயார் சண்முகவடிவு இடம்பெற்ற சிறப்பு புகைப்படம்.