கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் திரைப்பட நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்க்கும் ஒரு கணக்காளர், வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் சந்தித்து, அந்த கணக்கு – வழக்குகளைக் கொண்டு வந்து காண்பித்தார்.
அதைப் பார்த்த அதிகாரி ஹனுமந்த ராவ், “என்னயா நிறைய தர்மம், தர்மம்-னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?” என்று கேட்டுள்ளார்.
என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார்.
“சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என்.எஸ்.கே-வை பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்க மகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க” என சொல்லியுள்ளார்.
அதிகாரி ஹனுமந்த ராவ் கலைவாணரிடம் சென்று, “என் பெண்ணோட கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
பணம் தர என்.எஸ்.கே ஏற்பாடு செய்ய, அதை பார்த்துவிட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ் இப்படிச் சொல்லி விட்டுக் கிளம்புகிறார்:
“ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர் வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவதெல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க” என்று.
- நன்றி : முகநூல் பதிவு
