சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார் - கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் - மீண்டும் அவரே வெல்வார் என்கிறார்கள் காம்ரேட்டுகள்.
மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
பட்டாசு தயாரிப்புக்கு பேர் போன விருதுநகரில் வெயில் சுட்டெரிப்பதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறப்பதால், தொகுதி முழுவதும் ‘தக தக’வென தகிக்கிறது.
இந்த தொகுதி, முன்பு சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது, 2009-ம் ஆண்டில், முதன்முதலாக…