Browsing Category
கதம்பம்
வெற்றிக்கான விதிமுறைகளில் ஒன்று!
தாய் சிலேட்:
ஒருபோதும் தவறே செய்யாத
நிலையைக் கொண்டிருப்பது
வெற்றி ஆகாது
ஒருமுறை செய்த தவறை
இரண்டாவது முறையாக
செய்யாமலிருப்பதே
வெற்றி!
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
#George_Bernard_Shaw #ஜார்ஜ்_பெர்னாட் ஷா
உங்களை நீங்களே நேசியுங்கள்!
இன்றைய நச்:
உங்களை நீங்களே
நேசியுங்கள்;
மதியுங்கள்;
எதற்காகவும் அதில்
சமரசம் செய்து கொள்ளாதீர்கள்;
அதன்பிறகு தானாகவே
எவ்வளவு வளர்ச்சி
அடைகிறீர்கள் என்பதைக் கண்டு
நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்!
- ஓஷோ
#osho_quotes #ஓஷோ_சிந்தனைகள்
அன்பிற்காக தவமிருக்கும் மனித மனம்!
தாய் சிலேட்:
சிக்கல்களின்
நெரிசல்களுக்கு இடையில்
மனிதர்கள்
சதா நோன்பிருப்பது
அன்பெனும் சிறு
வரத்திற்காக மட்டும்!
- வண்ணதாசன்
வாசிக்கத் தூண்டுதல்!
இன்றைய நச்:
வாசிக்க நினைக்கும்
புத்தகத்தை விட
வாசிக்கத் தூண்டும்
புத்தகம்
பேரழகு!
ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!
எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை…
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அம்பானி இல்ல விழா!
தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் திரையுலகப் பிரபலங்களுக்கு தவறாமல் அழைப்பு விடுக்கப்படும்.
பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து சூப்பர்…
தன்னம்பிக்கையே நம்மை உயர்த்தும்!
தாய் சிலேட்:
மொத்த உலகமும்
முடியாது என்று சொல்லும்போது
ஒரு வேளை முடியலாம் என்று
மெல்லியதாக
உங்களுக்கு கேட்கும் குரலே
நம்பிக்கை!
- அப்துல் கலாம்
சர்வதேச நாடுகள் போற்றிய சரோஜினி நாயுடு!
‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) நினைவுநாள் இன்று (மார்ச் - 2).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி…
உங்களுக்கான இடம் எப்போதும் இருக்கும்!
இன்றைய நச்:
வாழ்க்கை எவ்வளவு
கடினமாகத் தோன்றினாலும்,
அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும்
வெற்றியடையக்கூடிய ஒன்று
எப்போதும் இருக்கும்!
ஸ்டீபன் ஹாக்கிங்
#Stephen_Hawking_facts #ஸ்டீபன்_ஹாக்கிங்
பற்றித் தொடரும் இருவினை!
படித்ததில் ரசித்தது:
மாடு வராது;
கன்று வராது;
மனைவி வரமாட்டாள்;
மகன் வரமாட்டான்;
ஆடை ஆபரணம் வராது;
பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமே;
ஆகையால் நல்லதை செய்யுங்கள்!
- பட்டினத்தார்
#பட்டினத்தார் #Pattinathar_thoughts