Browsing Category

சினிமா

‘சக்ரா’: இரும்புத் திரையை நினைவூட்டும் வெற்றி!

வெற்றி பெற்ற திரைப்படத்தின் தாக்கத்தில் இன்னொரு கதையை உருவாக்குவது சாதாரண விஷயம். தமிழ் திரையுலகம் தொடங்கிய காலத்தில் இருந்து தொன்று தொடரும் இந்த வழக்கத்தை மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது ‘சக்ரா’. விஷால், சமந்தா, ரோபோ சங்கர் நடிப்பில்…

‘தெனாலி’யில் கண்ணீரை மறந்த கமல்ஹாசன்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்த படம், தெனாலி. 2000 -மாவது வருடம் வெளியான இந்தப் படத்தில் ஈழத்தமிழராக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார்.…

42 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தாண்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு…

வாழ்த்தும் கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மைத்துனர் திருமணத்தில் வரவேற்புரையாற்றும் கலைவாணர். மேடையில் பேரறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி 18.02.2021  5 : 30 P.M

“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’

அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…

“மெட்டி ஒலி முதல் அசுரன் வரை”

சினிமா மாயங்களின் குழந்தை. அது உங்கள் ஆசையைத் தூண்டித் தூண்டி, உயரத்துக் கொண்டு செல்லும் வித்தையை ஒரு கடமையாகவேச் செய்கிறது. அதே நேரம், உங்களைப் பாதாளத்தில் தள்ளும் பாவத்தையும் இரக்கமின்றி செய்கிறது. அதனால்தான் அது சினிமா. இங்கு வெற்றி…

அமிதாப்பச்சன்: வியப்பூட்டும் 52 ஆண்டுகள்!

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடித்த முதல் படமான ‘சாத் இந்துஸ்தானி’ 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. படம் ரிலீஸ் ஆவதற்கு 9 மாதங்கள் முன்பாக, அந்தப் படத்தில் நடிக்க…

இணைய வழிக் கற்றலில் மாற்றங்கள் காலத்தின் தேவையா?

கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில் அரும்பிய ஆன்லைன் வழிக் கல்வியில் பல மாற்றங்களைச் செய்யவேண்டிய காலகட்டம். அரசுகளும் தொழில் நிறுவனங்களும் கல்விச் சாலைகளும் தாங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இவற்றுள்…

‘நானும் சிங்கிள்தான்’; முரட்டு சிங்கிள்களின் ‘கெக்கேபிக்கே’!

கடந்த சில ஆண்டுகளாக, ஒருவர் எந்த தசாப்தத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து கிண்டலடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருமணமாகாமல் தனியராகத் திரிபவர்களில் பலர் 90களில் பிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதாவது, இப்போது 30 வயதைத்…

‘C/O காதல்’; கடந்து போன காதல் குவியல்!

விதவிதமான கதாபாத்திரங்கள், வெவ்வேறு பருவங்களில் முகிழ்க்கும் காதல், குறிப்பிட்ட வட்டாரத்தில் நிகழும் வாழ்க்கை ஆகியவற்றை ஒரு நூலில் கோர்த்தாற்போல கதை சொல்கிறது ‘C/O காதல்’. திரைக்கதை மிகமெதுவாக நகர்வது போன்று தோன்றினாலும், குறிப்பிட்ட…