எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ டீசர் !

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’.

ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

vels
You might also like