Browsing Category
கதம்பம்
அன்பு அரிதானது…!
இன்றைய நச்:
உண்மையான அன்பில் கர்வமே இல்லை;
மாறாய், முழு நம்பிக்கை தரும்;
ஒரு ஆதூரம் வந்துவிட,
அது எதிராளியை திகைக்கச் செய்யும்;
அன்பு அரிதான விஷயம்;
அதனால்தான் திகைக்கச் செய்யும்!
- பாலகுமாரன்
#பாலகுமாரன் #Writer_Balakumaran_quotes
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது!
இன்றைய நச்:
அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை;
கொஞ்சம் போலி வார்த்தைகள்,
கெட்டிக்காரத்தனம், அதிகாரம்,
கொஞ்சல், கெஞ்சல் இப்படி
ஏதாவது ஒன்றுடன் கலந்து
காட்ட வேண்டியிருக்கிறது.
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது!
- வண்ணதாசன்
#வண்ணதாசன்…
மனதை மடை மாற்றுங்கள்!
தாய் சிலேட்:
மனச் சிக்கலைத் தீர்க்க
இசை...
வாசிப்பு...
எழுதுதல்...
என்று மனதைத்
திருப்புங்கள்!
கவிஞர்.க.மோகனசுந்தரம்
#கவிஞர்_க_மோகனசுந்தரம் #Kavingar_Mohanasundaram
வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்!
தாய் சிலேட்:
வெற்றி என்பது
முன்னேற்பாடும்
வாய்ப்பும்
சந்திக்கும் இடம்!
மார்க் ட்வைன்
#success_quotes #மார்க்_ட்வைன் #mark_twain_quotes
முரண்பட்ட முகமூடிகள்!
படித்ததில் ரசித்தது:
நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் - ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் -…
நிழலும் நிஜமும்…!
இன்றைய நச்:
உனக்குள் இன்னொரு
இருட்டு மனிதன்
ஒளிந்து கொண்டிருக்கிறான்
என்பதை உணர்த்தவே
உன் நிழல் படைக்கப்பட்டிருக்கிறது!
- கவிஞர் கலாப்ரியா
#கவிஞர்_கலாப்ரியா #script_of_kavignar_kalapriya
அழியாத உன்னைக் கண்டுபிடி!
இன்றைய நச்
எந்த கணமும் நிகழக் கூடிய
மரணத்தைப் பற்றிய
ஆழ்ந்த உள்ளுணர்வு
உனக்கு இருந்தால்,
அநாவசியமான விஷயங்களை
விலக்கி வைப்பாய்;
தேடல் தீவிரமாகும்;
உன் உடல் அழியும் முன்
அழியாத உன்னைக் கண்டுபிடி!
- ஓஷோ
#ஓஷோ #osho_quotes
உதவுவதே பேரின்பம்!
தாய் சிலேட்:
உடல் நோயற்று இருப்பது,
முதல் இன்பம்;
மனம் கவலையற்று இருப்பது
இரண்டாம் இன்பம்;
பிற உயிருக்கு
உதவியாக வாழ்வது
மூன்றாவது இன்பம்!
- வள்ளலார்.
#வள்ளலார் #vallalar quotes
வலிமையுடன் கூடிய தந்திரங்களே வெல்லும்!
இன்றைய நச்:
யுத்தத்தில் ஓநாய்கள்,
மனிதர்களை விடவும்
விவேகமிக்கவை;
அதிக அளவில்
நிலமும் மக்களும்
இருப்பதால் மட்டும்
எவராலும் ஒரு யுத்தத்தை
வென்றுவிட முடியாது;
நீ ஒரு ஓநாயா அல்லது
ஆடா என்பதை பொறுத்தது அது!
- ஜியாங் ரோங்
உழைப்பு உன்னை உயர்த்தும்!
தாய் சிலேட்:
அதிகாலை
நீ நினைத்த நேரத்தில்
எழுந்துவிட்டாலே
தோல்விகள்
உன்னைவிட்டு
ஒதுங்கிக் கொள்ளும்!
- அப்துல் கலாம்