Browsing Category
கதம்பம்
வாழ்வை வளப்படுத்தும் வழிகாட்டிகள்!
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து;
ஏனெனில்,
ஒவ்வொருவரும்
ஒரு வழிகாட்டியாக
அனுப்பப்படுகிறார்கள்,
தொலைதூரத்திற்கு
அப்பாலிருந்து!
- ரூமி
இளையோரிடம் இரவல் பெற்ற பூமி!
இந்த உலகை நம் முன்னோர்களிடமிருந்து
பரம்பரை சொத்தாக நாம் பெறவில்லை;
நம் பிள்ளைகளிடமிருந்து
கடனாகவேப் பெற்றுள்ளோம்!
- செவ்விந்தியப் பழமொழி
அச்சத்தை ஏற்படுத்தும் சுதந்திரம் அவசியமா?
சுதந்திரத்தைக் கண்டு
மனிதன் பயப்படுகிறான்;
ஆனால்,
அந்த சுதந்திரம் மட்டும்தான்
உன்னை மனிதனாக்குகிறது!
- ஓஷோ
ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது நல்லதும் கெட்டதும்!
நல்லதும்
கெட்டதும்
எங்கும் உண்டு
நாடுவது
என்னவென்பதே
முக்கியம்!
- ஜெயகாந்தன்
கற்றலில் இருந்து வருவது ஞானம்!
ஞானம்
வயோதிக்கத்தினால்
வருவதல்ல;
கற்றலில்
இருந்து வருவது!
- அன்டன் செக்கோவ்
நடனப் பள்ளி தொடங்கிய நடிகை!
பரதநாட்டியத்தின் மீது பிரியம் கொண்ட சின்னத்திரை நடிகை ஹரிபிரியா, அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியையாகவும் மாறியுள்ளார்.
உள்ளதை உணர்வதே ஞானம்!
உங்கள் இதயங்களில்
இருள் இருப்பதுபோல்
வெளிச்சமும்
நிறைந்திருக்கிறது
என்பதே நிஜம்!
- ஆப்ரகாம் லிங்கன்
நல்லதும் கெட்டதும் நாம் பார்க்கும் பார்வையில் தான்!
இந்த உலகத்தில்
இது அழகு,
இது அழகில்லை என்று
எதையும் சொல்ல முடியாது;
நாம் சந்திக்கும்
எல்லா மனிதர்களுமே
நல்லவர்கள்தான்;
நாம் பார்க்கும்
அனைத்துமே அழகுதான்!
- பிரபஞ்சன்
போதைப் பொருட்களை ஒழிக்க கை கோர்ப்போம்!
நாம் ஒவ்வொருவரும் நமது திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்தி போதை பொருட்களை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்; போதைப்பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம்; நல்லதொரு உலகை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திடுவோம்..!
சகிப்புத் தன்மை உருவாக்கும் உறவுப் பாலம்!
சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல்,
தியாகம் ஆகியவற்றால்
என்ன ஆகும் என்றால்,
நம்மைச் சுற்றி எத்தனை மக்கள்
இருக்கிறார்களோ,
நமக்குத் தொடர்புள்ள அவர்கள்
உயிரோடு ஊடுருவி
ஒரு நட்பை வளர்த்துக்கொள்ள முடியும்!