Browsing Category
கதம்பம்
காயங்களை ஆற்றும் காலம்!
நமக்கான ஒரு காலம் நிச்சயம் வரும். இந்தத் துயரங்கள் எல்லாம் நமக்குத்தான் நடந்ததா என நாமே சிரிக்கும்படியான காலமாக அது இருக்கும் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.
நம்மை மேன்மையடையச் செய்வதே அறிவு!
கற்றல் படைப்பாற்றலை அளிக்கிறது; படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது; சிந்தனை அறிவை வழங்குகிறது; அறிவு உங்களை மேன்மையடைய செய்கிறது.
காலம்தான் மாற்றம் தரும் மாமருந்து!
தாய் சிலேட்:
கடந்த காலம் பற்றிய நினைவுகள்
மனிதனுள் மாற்றம் தருவதில்லை;
எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே
மனிதனுள் மாற்றத்தை விதைக்கிறது!
- புத்தர்
நெருக்கடிச் சூழலில் சிறப்பாகச் செயல்படுவோம்!
ஒரு நெருக்கடியில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதே தலைமையின் உண்மையான சோதனை! – பிரையன் ட்ரேசி.
வலியின் ஆழம் நேசிப்பில் தெரியும்!
குத்திய கத்தியின் கூர்மை என்னால் தீட்டப்பட்டது என்பதே இதில் வலி!- எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிந்தனை வரிகளின் தொகுப்பு.
முடிந்த காலத்தைக் கடந்து வா…!
ஏற்கனவே நடந்து முடிந்தது குறித்து மனம் வருந்தாதே; எல்லையற்ற எதிர்காலம் உன் எதிரே பரந்து விரிந்திருக்கின்றது!- விவேகானந்தர்.
கவலையைப் பற்றிக் கொள்வது ஏன்?
இன்றைய நச்:
சந்தோஷமாக
நினைத்திருக்க
எத்தனையோ
கணங்கள் இருக்கின்றன;
ஆனால், மனம் ஏன்
துயர நொடிகளையே
பூதாகரமாக்கிப்
புலம்பி தவிக்கிறது!
- எழுத்தாளர் பெருமாள் முருகன்
தலைமைக்குரிய தனிப் பண்பு
தாய் சிலேட்:
ஒரு தலைவரின் பங்கு
அணியை
வலிமையாக்குவதல்ல;
அணியை சிறப்பாக
உருவாக்குவது!
– சைமன் சினெக்
எங்கு, எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
தாய் சிலேட்:
உங்களைக் கையாள,
உங்கள் மூளையைப் பயன்படுத்தவும்;
மற்றவர்களைக் கையாள,
உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்!
– எலினோர் ரூஸ்வெல்ட்
வேலை மீதான விருப்பத்தை அதிகமாக்கிக் கொள்வோம்!
தினமும் எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ அதில் ஒன்றிரண்டை செய்ய பழகிக்கொள்ளுங்கள்; உங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்ய உதவியாக இருக்கும்.