Browsing Category
கவிதைகள்
உன்னைப் பார்ப்பது…!
ஒரு புகைப்படத்தை பார்ப்பதுபோலவே
இருக்கிறது
நான் ஒருபோதும் நுழைய முடியாத
அல்லது
ஒருபோதும் வெளியேற முடியாத
ஒரு காலத்தின் தனிமையில்
உன்னைத் தொடுவது
ஒரு பிம்பத்தைத் தொடுவதாகவே இருக்கிறது
இப்போது நீ
என்னை முத்தமிடுகிறாய்
ஒரு புகைப்படத்தின்…
பிறமொழிக் கவிதைகளை ஏன் மொழிபெயர்க்கவேண்டும்?
நூல் அறிமுகம்:
சிங்கப்பூரில் வசிக்கும் மஹேஷ்குமார், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்டவர்.
ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம், மாரத்தான் ஓட்டம், தன்னார்வ தொண்டூழியம் என பல திசைகளில் தன் சிறகுகளை விரித்துவருகிறார்.…
ஆயுளின் கடைசித் தேடல்!
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்…
நம்பிக்கையைக் குலைத்தவன்!
தூரத் தொலைவில்
அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி
இங்கு வரக்கூடுமெனத்
திடுக்கிட்டேன்.
வேறு யாரோ...
அப்படி எண்ணாதிருந்தால்
அவனே வந்திருப்பான்.
- சுந்தர ராமசாமி
அறை முழுவதும் நிரம்பியிருக்கும்…!
இந்த அறையில்
கொல்லப்பட்ட மனிதனின்
ரத்தக் கறைகளை கழுவ
எனக்கு
ஒரு பக்கெட் தண்ணீர் போதும்;
இந்த அறையில் ஒரு மனிதனை
நிராகரித்துச் சென்ற
ஒருவரின் பிம்பங்களைக்
கழுவ எனக்கு
ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்!
மனுஷ்யபுத்திரன்
தமிழுக்கு ஏன் இந்த மாற்றம்…!
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்று
தமிழிலே பெயர் வைப்பார்
எத்தனை பேர்?
அர்ச்சனை சீட்டுக்கள்தான்
தமிழில் உள்ளனவே தவிர
அர்ச்சனைகள் அல்ல.....
சமஸ்கிருதத்தில் பேசினால்தான்
சாமிக்கே புரியுமென்று
தேவாரம் திருவாசகத்தை
பழைய கடைக்குப் போட்டுவிட்டான்…
எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது!
நான் அப்பாவாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் மகனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் கணவனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் அண்ணனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் நண்பனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
மாமாவாக
மருமகனாக
குருவாக
சீடனாக
கவிஞனாக
எழுத்தாளனாக…
பிரிவாற்றாமை…!
ஒரு பென்சிலைச் சீவுவதுபோல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில்
நகர்த்துவதுபோல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை
மடிப்பதுபோல
ஒரு பழைய பயணச் சீட்டை கசக்கி
எறிவது போல
ஒரு தீக்குச்சியை வெறுமனே
கொளத்துவதுபோல
ஒரு அலைவரிசையிலிருந்து
இன்னொரு அலைவரிசைக்கு…
நிராகரிப்பின் வலி…!
தினம் ஒரு புத்தக மொழி
நிராகரிப்பின் வலி
என்றெல்லாம்
ஒன்றுமில்லை...
அதில் ஒரு சிறிய
அவமானம்
இருக்கிறது.
அதற்கு மட்டும்
பழகிக் கொண்டால்
போதும்.
- மனுஷ்யபுத்திரன்
குட்டி குட்டி வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண மாலை!
பிருந்தா சாரதியின் ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ நூல் விமர்சனம்
இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி அவர்களிடம்தான் முதன் முதலாக நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
ஜேடி - ஜெர்ரி ஆகியோரில் ஜேடி எனப்படும் ஜோசப் டி சாமி அவர்கள் கும்பகோணத்தைச்…