Browsing Category

திரை விமர்சனம்

ஹனு மான் – சரியான விகிதத்தில் அமைந்த ஆக்‌ஷன் அட்வெஞ்சர்!

கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ‘சின்ன கல்லு பெத்த துட்டு’ என்ற வசனம் உண்டு. குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம், அந்த வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களால் பயன்படுத்தப்படுவதுண்டு. அதனைச் சாதிப்பதற்கு அளப்பரிய…

குண்டூர் காரம் – மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மட்டும்!

காரசாரமான சமையலைச் சாப்பிட்டு முடித்தபிறகு, மனம் தன்னாலே ‘ஆந்திரா மீல்ஸ்’ நினைவுகளோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கும். உணவில் தொடங்கி அனைத்து ரசனைகளிலும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தூக்கலாக இருப்பது அம்மண்ணுக்கான பாணி என்று கூட வர்ணிக்கலாம்.…

மெரி கிறிஸ்துமஸ் – ’த்ரில்’ ஊட்டும் கொண்டாட்டம்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரிசையில் இந்தித் திரையுலகம் சென்ற நடிகர்களின் பட்டியலில் சமீபமாக இடம்பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மும்பைகர், ஜவான் படங்களில் ஒரு பாத்திரமாக வந்துபோனவர், இந்தி திரையுலகில் ஒரு நாயகனாகத் தடம் பதித்துள்ள படமே…

மிஷன் சேப்டர்-1: விஜயகாந்த் பாணி ஆக்‌ஷன் படம்!

குறிப்பிட்ட களங்களை, குறிப்பிட்ட வகைமையில் மட்டுமே பயணிக்கும் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் தமிழில் குறைவு. சமீபகாலமாக அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ் திரையுலகில் நிகழ்ந்து வருகின்றன. ‘அவியல், பொறியல், கூட்டு, பச்சடி, பாயாசம்னு ஃபுல் மீல்ஸ்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…

ஆயிரம் பொற்காசுகள் – கொள்ளைச் சிரிப்புக்கு உத்தரவாதம்!

சில படங்களின் டைட்டிலை கேட்டால், ‘ரொம்ப பழைய படமோ’ என்று தோன்றும். ஆனால், அப்படங்கள் தரும் அனுபவம் வேறுவிதமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மரகத நாணயம்’ படம் கூட அப்படித்தான் இருந்தது. ‘நான் போகிறேன் மேலே மேலே’ பாடலைத் தந்த…

‘சபாநாயகன்’ விதைப்பது கொண்டாட்டமா, திண்டாட்டமா?

காதலும் நகைச்சுவையும் கலந்த படங்கள் தமிழில் அரிதாக வெளியாகும். அவையும் கூட முழுக்கச் சினிமாத்தனமாக இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே யதார்த்த வாழ்வின் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும். அப்படியொரு உறுதியைத் தந்தது அசோக் செல்வன்,…

ஜிகிரி தோஸ்து – நண்பர்களின் சாகசப் பயணம்!

ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு நடிப்புக் கலைஞர்கள், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களைத் தாண்டி அது குறித்த தகவல்களும் கூட முக்கியக் காரணமாக இருக்கும். அந்த வகையில், ‘ஜிகிரி தோஸ்து’ என்ற டைட்டிலே நம் கவனத்தை…

டன்கி – நேர்த்தி குறைவென்றாலும் ரசிப்பதில் குறையேதுமில்லை!

எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் ‘கடவுள் எனும் முதலாளி’ பாடலின் இடையே ’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற வரிகள் வரும். அதனைக் கேட்கையில், வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் அல்லது…

‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?

குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும், அவை ஒவ்வொன்றும் பார்வையாளர்களிடத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கம்…