Browsing Category

கவிதைகள்

வண்ணத்துப்பூச்சியும் கடலும்!

சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி. வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல்நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து…

இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!

“இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும், நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கிவிடும்” - ‘புதுப்பேட்டை’ படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகள்

ஆள வந்தார் அண்ணா…!

தமிழாண்டான் - தமிழர் மனம் ஆண்டான் தமிழ்நாடெனும் தனியொரு நிலம் ஆண்டான்... இனம் ஆண்டான்  - எங்கள் குலம் ஆண்டான் இதற்கிணையிலை எனும்படி வளம் ஆண்டான்... மொழி ஆண்டான்  - தமிழ்த் திறம் ஆண்டான் வழி இதுவென விரல்வழி திசை ஆண்டான்... குறள் ஆண்டான் …

கதவைத் திறக்கும் கவிதைகள்!

கவிஞர் கரிகாலனின் கவிதை குறிப்புகள்:  சென்னைக்கு வந்த நினைவுகளை ஒரு கவிதை நூலுடன் இணைத்து சுவையாக எழுதியிருக்கிறார் கவிஞர் கரிகாலன். அந்த எழுத்தைப் படித்துப் பாருங்கள்... நேற்று லார்க்கை பார்க்கப்போயிருந்தேன். எனது கிரின்ஞ் தொகுப்பை…

தாழ்வாரங்களும் சிட்டுக் குருவிகளும்!

அப்போதெல்லாம் வீடுகளில் தாழ்வாரங்களும் தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகளும் இருந்தன தாழ்வாரம் முழுவதும் குப்பைகளும் குச்சிகளும் சிதறுவதுபற்றி கவலைப்படாமல் சிட்டுக்குருவிக்கு சீமந்தம் நடத்தாத குறையாக அதன் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன…

எனக்கும் வானத்துக்குமான போட்டி!

ஒருநாள், எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது நான் புன்னகையை எடுத்து வைத்தேன் அது வைகறையை எடுத்து வைத்தது நான் கண்ணீரை எடுத்து வைத்தேன் அது மழையை எடுத்து வைத்தது நான் வியர்வைத்துளிகளை எடுத்து வைத்தேன் அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது…

முதுமைக்கு இவ்வளவு சித்திரவதைகளா?

பரண் : சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர்களைக் கடத்துகிறார்கள். அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சாகடித்து சுவர்களுக்கு இடையில் அடுக்கிச் சிமெண்டால் பூசி மெழுகுகிறார்கள். இப்படிச் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்சி ஊடகங்கள்…

பிரபஞ்சம் கேட்கும்படி பாடுங்கள்…!

கவிஞர் எம்.சோலையின் ‘சில நேரங்களில் சில கவிதைகள்’ நூலுக்காக கோ.வசந்தகுமாரன் எழுதிய அணிந்துரை. **** ஒரு துளி நீரையும் முத்தமிடாத பாலைவனத்தில் பெய்யும் கோடை மழையைப் போல பெருமகிழ்ச்சி அளிக்கிறது கவிஞர் எம். சோலை எழுதியுள்ள 'சில நேரங்களில் சில…

கொஞ்சுதமிழ்க் காவிரியாள்!

- கவிஞர் மகுடேசுவரன் இன்றைய காவிரி வெள்ளத்தைக் கண்டு கண்ணதாசன் பாடியிருந்தால் எப்படிப் பாடியிருப்பார்? எழுதிக் காட்டட்டுமா என்று கேட்டிருந்தேன். அன்பர்கள் பலரும் தம் ஆர்வத்தைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்காக இதோ என்று ஒரு மரபுக் கவிதையை…

எப்போது நீ மனிதனாவாய்?

உன்னுடைய கொடியை உயர்த்திப் பிடித்துக் கொள்! எதற்காக அடுத்தவர் கொடிக்கம்பத்தை அறுக்கத் துடிக்கிறாய்? உன்னுடைய மார்க்கத்தில் பூக்களைத் தூவிக் கொள்! எதற்காக அடுத்தவர் மார்க்கத்தில் முட்களைப் பரப்புகிறாய்? உன்னுடைய படத்தை ஆணியில் மாட்டிக்…