தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

“பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா”
 
– கவியரசர் கண்ணதாசன்
 
கண்ணதாசன் நினைவுநாள் (24 ஜுன் 1927 – 17 அக்டோபர் 1981).
 
*
 
“என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன்.
 
அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது.
 
நான் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததும் அவருக்கே ஒன்றும் புரியவில்லை.
 
தனிப்பட்ட விரோதங்களை நான் என்றுமே பார்ப்பதில்லை. திறமையையே பார்ப்பேன்.
 
திறமை உள்ளவர்கள் எனக்குத் தீங்கு செய்தாலும், நான் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மை செய்திருக்கிறேன்”
 
– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
 
(கண்ணதாசன் அவர்களின் ‘தென்றல்’ பத்திரிகையைப் படிக்கும் கலைவாணர், உடன் மதுரம் அம்மா, கவியரசர் கண்ணதாசன்)
 
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.
vels
You might also like