‘மகான்’ ஆக்கப்பட்ட திருவள்ளுவர்!

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

– என்று ஒன்னே முக்கால் வரியில் செயதக்க செயல்பாட்டைப் பற்றி சொல்லியிருக்கிற திருவள்ளுவருக்கே இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்து அவரை காவி மயமாக ஆக்கியதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன.

தற்போது சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியையொட்டிதான் திருவள்ளுவரை மறுபடியும் காவிமயமாக ஆக்கியிருந்தார்கள்.

திருவள்ளுவரைப் பற்றி பிரதமர் மோடி பேசியதும், அதை மொழி பெயர்த்தவர் காவி மயமாக்குவதில் இன்னும் ஒரு படி மேலே போனார். திருவள்ளுவரை முனிவர் என்றார். அடுத்து மகான் என்றார்.

இப்படி மாறி மாறி காவிமயமான சொற்களும் காவி உடையில் பொறுத்தப்பட்டதால், திருவள்ளுவரை எவ்வளவு தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்.

போகிற போக்கை பார்த்தால், மகானாகிவிட்ட திருவள்ளுவரை சென்னை மயிலை பகுதியின் பாஜக வட்டச் செயலாளராக நியமித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

You might also like