நான் உதவ மறுப்பது இந்த ஒரு விஷயத்திற்காகத் தான்!

நடிகர் நாகேஸ்வர ராவ்

தெலுங்கு நடிகர்களில் முன்னணி நடிகர் ஏ. நாகேஸ்வர ராவ்.

இவருடைய வாரிசுகள் (நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் அக்கினேனி) இப்போதும் தெலுங்குத் திரையுலகில் பிரகாசிக்கிறார்கள்.

1956 ஏப்ரலில் ‘நடிகன் குரல்’ பத்திரிக்கையில் வெளிவந்த அவருடைய
பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

***

‘’நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது.

நான் எந்த ஒரு காரியத்திற்கும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்துவிடுவேன்.

ஆனால், கடவுள், கோவில், மதம் என்ற பெயரைச் சொல்லிக் கேட்டால், நான் ஒரு காலணாக் கூடக் கொடுப்பதில்லை.

நான் நேர்முகமாக உதவ மறுப்பது இந்த ஒரு காரியத்திற்குத் தான்’’

You might also like