நூல் அறிமுகம் :
தோழர் தமிழரசன் அவர்களின் மீன் சுருட்டி அறிக்கை – 1985
தேசிய இனச் சிக்கலையும் தேசிய இன விடுதலையையும் நுணுக்கமாக ஆய்ந்த தோழர் தமிழரசன் அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1985-ல் மீன்சுருட்டியில் நடத்திய கருத்தரங்கில், “சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” குறித்து இவ்வறிக்கையை முன்வைத்தார்.
தோழர் தமிழரசன் (1945–1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் (த.பொ.க.) நிறுவனர் மற்றும் பொதுச் செயலராக இருந்தார்.
அரியலூர் மாவட்டம் மதகளிர் மாணிக்கத்தில் பிறந்த இவர், கோவையில் வேதியியல் பொறியியல் (B.E.) படித்தார்.
இளம் பருவத்திலேயே மார்க்சிய-லெனினிய சிந்தனையில் ஈடுபட்டு, மாணவராக இருக்கும்போதே மக்கள் விடுதலை இயக்கத்தில் இணைந்தார்.
1975-ல் அரசால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்.
இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்ற புரிதலை முன்வைத்து, தமிழ்நாட்டு விடுதலையை வலியுறுத்தினார்.
1985-ல் பெண்ணாடம் மாநாட்டின் மூலம் தேசிய இன விடுதலை அரசியலை திடமாக நிலைநாட்டினார்.
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக விடுதலைக்காகவும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார். சாதி ஒழிப்பின் தேவையையும் விடுதலை அரசியலோடும் இணைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மக்கள் இயக்கங்களை அமைத்தார். காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு முயற்சி செய்தார்.
தமிழ்நாடு விடுதலைப் படையை நிறுவினார். அவரது அரசியல் பார்வைகள் இன்றும் தமிழக விடுதலை அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சர்வ வல்லமையுடன் நிலைத்து நீடித்து நிற்கும் சாதியமைப்பை அடியோடு அழிக்க வேண்டுமெனில் அதைப் பற்றிய மார்க்சிய அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான பார்வையும், அணுகுமுறையும் தேவை.
தோற்றம், வளர்ச்சி, அழிவு, நிலைமைகள் பற்றிய தெளிவும் தேவை என்பதை நூலில் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் தமிழரசன்.
சாதியமைப்பு என்றால் என்ன?
சாதி தோன்றக் காரணம் என்ன?
சாதி நீடிக்கக் காரணம் என்ன?
சாதியமைப்பு எப்போது தோன்றியது?
சாதியமைப்பு தோன்றியது எப்படி?
சாதிகள் எப்படிப் பெருகின?
சாதியைக் காப்பவர்கள் யார்?
சாதி ஒழிப்பு போராட்ட வரலாறு என்ன?
சாதிகளை ஒழிப்பது எப்படி?
சாதிச்சங்கங்கள் அமைப்பது சரியாகுமா?
சாதிச் சங்கங்களைக் கட்டலாமா?
சாதி ஒழிக்கவேண்டிய அவசியமென்ன?
சாதியை அழிக்கக்கூடியவர்கள் யார்?
– இந்த கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை நூலில் பதிவு செய்திருக்கிறார் தோழர் தமிழரசன்.
நூல்: சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்:
தோழர் தமிழரசன் அவர்களின் மீன் சுருட்டி அறிக்கை – 1985
ஆசிரியர் : தோழர் தமிழரசன்
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 84