வர்மக்கலை – தமிழருக்கான சிறப்பு அடையாளம்!

வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான பார்வையாளர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.

அதற்கு முன்பே கன்னியாகுமரி மாவட்டத்து மக்களிடையே வர்மக்கலை என்பது மிகவும் பரிட்சயம் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் உள்ள பெரும்பகுதி மக்களுக்கு அந்த அளவுக்கு தமிழர்களின் பூர்வீகக் கலையான வர்மக்கலையைப் பற்றி அவ்வளவு தெரியவரவில்லை.

பழைய சென்னை மாகாணத்தில் கேரளாவின் ஒரு பகுதியும் கன்னியாகுமரி பகுதியும் இணைந்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல்வேறு வர்மக்கலை ஆசான்கள் அந்த அரசவையிலேயே இருந்தார்கள்.

அதில் பல்வேறு தரப்பினர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக வர்மக்கலையின் பல நுணுக்கங்களை அறிந்திருந்த அவர்கள்தான் பல வைத்திய முறைகளையும் கையாண்டிருக்கிறார்கள். பெண்களிலும் சில வர்மக்கலை ஆசான்கள் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய நீண்ட வர்மக்கலை பாரம்பரியத்திலிருந்து வந்த சில வர்மக்கலை ஆசான்கள், இப்போதும் அதே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வர்மக்கலையைத் தற்போது பரப்பி வருகிறார்கள்.

அதன் வைத்திய முறையை எளிய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து வருகிறார்கள்.

அதில், நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வர்மக்கலை ஆசான்கள் இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலின் நகரப்புறத்திலேயே உள்ள மாதா வைத்திய சாலையை நடத்தி வருபவர் மருத்துவர் சுவாக்கீன் அம்புரோஸ் என்கின்ற வர்மக்கலை ஆசான்.

இவருடைய மருத்துவமனையில், காலில் அடிபடுவது துவங்கி, முதுகுத்தண்டு பிரச்சனைகள் உட்பட, பெண்களுக்கு வரும் பல்வேறு விதமான உடலிலும் எலும்பிலும் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.

நரம்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய முறையில், மற்ற மருத்துவ முறைகளோடு ஒப்பிடும்போது, மிகவும் குறைந்த செலவில் இங்கு வைத்தியம் அளிக்கப்படுகிறது என்பது இதனுடைய தனிச்சிறப்பு.

இப்படிப்பட்ட வர்மக்கலை மரபில் வந்தவரான டாக்டர் அம்புரோஸ் மருத்துவம் மட்டுமல்லாமல் சில நூல்களையும் எழுதியிருக்கிறார்.

அப்படி அவர் எழுதிய ‘தண்டவாளப் பூக்கள் நானூறு’ என்ற நூலைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கடிதம் இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. 

********

நூல்: ‘தண்டவாளப் பூக்கள் நானூறு’
ஆசிரியர்: மருத்துவர் சுவாக்கீன் அம்புரோஸ்
சுதர்சன் புக்ஸ் கிராப்ட்ஸ்
பக்கங்கள்: 231
விலை: ரூ. 250/-

 

You might also like