தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக இருப்பதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்றும் (16-ம் தேதி) நாளையும் (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் எம்.எல்.ஏ.க்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
பேரவை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான இந்தப் பயிலரங்கை முதலமைச்சர் விஜய், குத்துவிளக்கு ஏற்றி இன்று (16.06.2026) தொடங்கி வைத்தார்.
கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, இரண்டு நாட்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அவை மரபுகள், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பேரவை விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் அர்லேகர் உரையுடன் நாளை மறுநாள் (18-ம் தேதி) கூட உள்ளது.
அதற்கு முன்னதாக, எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த புத்தாக்கப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– வைஷ்ணவி பாலு