செய்தி:
அனைத்து வகையான வைரஸ்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் தடுப்பூசியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.
கோவிந்த் கமெண்ட்:
மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனையோ ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அதாவது அதிவேகத்தில் வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உரியதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளையில் இதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சக மனிதர்களை குறிப்பாக பெண்களை கேவலப்படுத்துகிறவர்களும் பரவலாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் விசித்திரம்.