செய்தி:
கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்!
– தவெக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை.
கோவிந்த் கமெண்ட்:
தான் பதவிக்கு வந்தபிறகும் நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூறுவதையே வழக்கமாக வைத்திருந்த பாஜக இப்படிப் பேசலாமா?
தமிழிசை பேசுவதைப் பார்த்தால், அவர் தவெகவுக்கு ஆலோசனை சொல்கிறாரா? அல்லது திமுக ஆட்சி மீது பழி போட்டுவிடக்கூடாது என்று திமுக சார்பாக குரல் கொடுக்கிறாரா? என்கிற சந்தேகம் தான் வருகிறது.